கரூர்: அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் அரவக்குறிச்சி அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார்.
அரவக்குறிச்சியில் அரசு பள்ளிகளில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு. "உங்களைத் தேடி உங்கள் ஊரில்"என்ற தமிழக அரசின் புதிய திட்டத்தில் அரவக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் சீத்தப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியிலும் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மூலம் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவுகளை தரம் மற்றும் ருசி குறித்து ஆய்வு செய்தார். பள்ளியில் குழந்தைகளுக்கு வழங்கும் உணவுகளை பரிமாறி பின்னர் பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது, தனி துணை ஆட்சியர் சைபுதீன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) தேன்மொழி, அரவக்குறிச்சி பேரூராட்சி தலைவர் ஜெயந்தி, பள்ளப்பட்டி நகராட்சி தலைவர் முனவர்ஜான், பேரூராட்சி செயலாளர் வேல்முருகன் பள்ளப்பட்டி நகராட்சி ஆணையர் பால்ராஜ், ஊராட்சிகள் இயக்குனர் அன்புமணி,மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) சிவராமகிருஷ்ண ராஜ், அரவக்குறிச்சி வட்டாட்சியர் செந்தில்குமார், , வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஹேமாவதி, தேன்மொழி, அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.