இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தால் ஒளிமயமான எதிர்காலம் - ஜோதிமணி

அதிமுக பாஜகவுக்கு நேற்றும், இன்றும், நாளையும் ஜால்ரா போட்டு கொண்டு இருப்பார்கள். அவர்களால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து தான் ஏற்படும். இந்தியாவிற்கு ஒளிமயமான எதிர்காலம் அமைய வேண்டுமானால் இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். என கரூரில் நடந்த பிரச்சாரத்தில் எம்பி ஜோதிமணி தெரிவித்தார்.

Update: 2024-03-28 06:26 GMT

கரூர் நாடாளுமன்ற காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஜோதிமணி மீண்டும் களம் இறங்கியுள்ளார். நேற்றுடன் கேட்டு மனு தாக்கல் நிறைவடைந்த நிலையில் இறுதி நாளில் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்த காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி இன்று முதல் கட்டமாக தனது பிரச்சாரத்தை கரூர் கோடங்கிபட்டி பகுதியில் உள்ள முத்தாலம்மன் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு பிறகு தனது பிரச்சாரத்தை துவக்கினார்.

அப்போது அங்கு கூடியிருந்த ஏராளமான கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு பிரச்சாரத்திற்கு வந்த ஜோதி மணிக்கு ஆரத்தி எடுத்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

பின்னர் பொதுமக்களிடையே ஜோதிமணி பேசும்போது, பாஜகவுக்கு அதிமுக அரசாங்கம் நேற்றும், இன்றும், நாளையும் ஜால்ரா  போட்டு கொண்டு இருப்பார்கள். அவர்களால் தமிழ்நாட்டிற்கு ஆபத்து தான் ஏற்படும் என்றும், 410 ரூபாய்க்கு வாங்கிய சிலிண்டர், இன்று 1000, 1200, 1500 என்று வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து விலை ஏற்றதால் விலைவாசி உயர்வு ஏற்பட்டது. இந்த நிலை கரூருக்கும், இந்தியாவிற்கும் மாற வேண்டும் என்றால், இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும் என்று வாக்காளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார் ஜோதிமணி.

Tags:    

Similar News