கரூர் : காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி முன்னிலை
கரூர் நாடாளுமன்றத் தொகுதியின் 2 சுற்று முடிவின்படி காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 51,129 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
கரூர் பாராளுமன்ற தொகுதி இரண்டாவது சுற்று அதிகாரப்பூர்வ முடிவு. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், கரூரை அடுத்த தளவாய்ப்பாளையம் பகுதியில் உள்ள குமாரசாமி பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இன்று காலை முதல் எண்ணப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணிக்கை குறித்து பல்வேறு தகவல்கள் மாறி மாறி வந்த போதும், தேர்தல் ஆணையம் முறைப்படி, முதல் சுற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த தேர்தலில் நான்கு முனை போட்டியாக இருந்தது
. கரூர் பாராளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக ஜோதிமணி,அதிமுக வேட்பாளராக தங்கவேல், பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக செந்தில் நாதன்,நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கருப்பையா போட்டியிட்டனர். தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள இரண்டாவது சுற்றில் காங்கிரஸ் ஜோதிமணி 26,510- வாக்குகள், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 18,634 வாக்குகள், பிஜேபி வேட்பாளர் செந்தில்நாதன் 4,616 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 4356- வாக்குகள் பெற்றுள்ளனர்.
இரண்டாவது சுற்று வரை பெற்ற மொத்த வாக்குகள் விவரம். காங்கிரஸ் ஜோதிமணி 51,129- வாக்குகள், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 40,583- வாக்குகள், பிஜேபி வேட்பாளர் செந்தில்நாதன் 9,526 வாக்குகள், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கருப்பையா 8,093- வாக்குகள் பெற்றுள்ளனர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.