கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தல்: வேட்பு மனு தாக்கல் செய்த மாரப்பன்
கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தலுக்காக வழக்கறிஞர் மாரப்பன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தலுக்காக வேட்பு மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் மாரப்பன். கரூர் மாவட்ட வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பாக வருடம் தோறும் தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்வது வழக்கம்.
சுமார் கடந்த 10 ஆண்டுகளாகவே வழக்கறிஞர் மாரப்பன் தொடர்ந்து கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார். வழக்கறிஞர் மாரப்பன் தற்போது தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் துணைத் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி கரூர் மாவட்ட வழக்கறிஞர் சங்க தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் வழக்கறிஞர் சங்க தலைவர் தேர்தலுக்கு மீண்டும் மாரப்பன் தலைமையிலான அணியினர் போட்டியிடுகின்றனர். இதன் அடிப்படையில் தலைவராக வழக்கறிஞர் மாரப்பன், செயலாளராக நகுல்சாமி, துணைத் தலைவராக தர்மசேனன், துணைத் தலைவராக கோபாலகிருஷ்ணன்,
பொருளாளராக நாகேஸ்வரன், இணை செயலாளராக ரமேஷ் ஆகியோர் வழக்கறிஞர் மாரப்பன் அணியில் போட்டியிடுகின்றனர். இதற்கான வேட்பு மனுவை நேற்று மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வழக்கறிஞர்கள் அறையில் தேர்தல் அலுவலராக பொறுப்பேற்றுள்ள நவநீதன் என்பவரிடம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்தனர். மாரப்பன் தலைமையிலான அணிக்கு எதிர் அணியினர் நாளை வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.