கரூர் மாவட்டத்தில் 104. 90 மிமீ மழை பதிவு

கரூர் மாவட்டத்தில் 104. 90 மிமீ மழை பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக க.பரமத்தியில் 17.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.;

Update: 2024-01-10 04:32 GMT

மழை 

தமிழகத்தில் இரண்டு நாட்களுக்கு தொடர்ந்து மழை இருக்கும் என சென்னை வானிலை மையம் ஏற்கனவே அறிவிப்பு செய்தது. அதன் அடிப்படையில் கரூர் மாவட்டத்தில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணபட்டு, அவ்வப்போது பரவலாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. நேற்று மாவட்டம் முழுவதும் பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவிப்பு செய்துள்ளது. அந்த அறிவிப்பில் கரூரில் 7 மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 8.4 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 17 மில்லி மீட்டர், மாவட்டத்தில் அதிகபட்சமாக க. பரமத்தியில் 17.6 மில்லி மீட்டர், குளித்தலையில் 7.1 மில்லி மீட்டர், தோகை மலையில் 2 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 5.4 மில்லி மீட்டர், மாயனூரில் 4 மில்லி மீட்டர், பஞ்சபட்டியில் 12 மில்லி மீட்டர், கடவூரில் 13.3 மில்லி மீட்டர், பால விடுதியில் 7.1 மில்லி மீட்டர், மயிலம்பட்டியில் 4 மில்லி மீட்டர் என மாவட்டம் முழுவதும் மொத்தம் 104.90 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 8.74 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது
Tags:    

Similar News