கரூர் மாவட்டத்தில் 117.60 மில்லி மீட்டர் மழை பதிவு

கரூரில் 117.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகி உள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Update: 2024-05-18 07:53 GMT

கரூர் மாவட்டத்தில் 117.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் கோடையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கரூரில் 113 டிகிரி வரை வெயில் வாட்டி வதைத்தது. கடுமையான வெயிலுக்கு ஏற்ற வகையில் அதற்கு இணையாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு ஏற்கனவே செய்தது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று கரூர் மாவட்டத்திலும் மாலை முதல் இரவு வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்துள்ளது. இந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு செய்துள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 8.6மில்லி மீட்டர், அரவக்குறிச்சியில் 4.6, அணை பாளையத்தில் 4.0, மாவட்டத்தில் அதிகபட்சமாக க.பரமத்தியில் 48.4 குளித்தலையில் 2.0, தோகை மலையில் 1.0, பஞ்ச பட்டியில்4.8, கடவூரில் 8.0, பாலவிடுதியில் 32.2, மைலம்பட்டியில் 4.0 மில்லி மீட்டர் என மொத்தம் 117.60 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 9.80 மில்லி மீட்டர் என அந்த செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News