கரூர் மாவட்டத்தில் 66.40 மில்லி மீட்டர் மழை பதிவு.
Update: 2023-11-26 02:33 GMT
மழை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. ஒரு சில பகுதிகளில் பலத்த மழையும், ஒரு சில பகுதிகளில் மிதமான மழையும் தொடர்ந்து பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் அடிப்படையில் நேற்று கரூர் மாவட்டத்தில் பரவலாக பெய்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவித்துள்ளது. அதன் அடிப்படையில் கரூரில் 3 மில்லி மீட்டர், அணைப்பாளையத்தில் 4.2 மி.மீ.கடவூரில் 21 மில்லி மீட்டரும், பாலவிடுதியில் அதிகபட்சமாக 33.2 மில்லி மீட்டரும், மைலம்பட்டியில் 5 மில்லி மீட்டர் என மொத்தம் 66.40 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 5.53 மில்லி மீட்டர் ஆகும் என மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.