கரூர் மாவட்டத்தில் 8 மில்லி மீட்டர் மழை பதிவு

கரூர் மாவட்டத்தில் 8 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது.

Update: 2024-06-09 13:49 GMT

கரூரில் வெளுத்து வாங்கிய கனமழை 

கரூர் மாவட்டத்தில் 8 மில்லி மீட்டர் மழை அளவு பதிவு. மாவட்ட நிர்வாகம் சற்று முன் அறிவிப்பு. தென் மாநிலங்களில் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக ஆங்காங்கே மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் நேற்று அறிவிப்பு செய்துள்ளது.

மேலும் வரும் 14ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது. அதேசமயம் வரும் 12ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை ஒன்றிலிருந்து இரண்டு டிகிரி செல்சியஸ் வரை உயரலாம் எனவும் தெரிவித்துள்ளது. இதனிடையே கரூர் மாவட்டத்தில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், நேற்று மாவட்டத்தின் குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மழை பெய்துள்ளது. அந்த மழை நிலவரம் குறித்து மாவட்ட நிர்வாகம் சற்றுமுன் அறிவிப்பு செய்துள்ளது.

அதன்படி குளித்தலையில் 1.8 மில்லி மீட்டர், கிருஷ்ணராயபுரத்தில் 5.2 மில்லி மீட்டரும், மாயனூரில் ஒரு மில்லி மீட்டர் என மொத்தம் 8 மில்லி மீட்டர் மழை அளவு பதிவாகியுள்ளது. இதனுடைய சராசரி அளவு 0.67 மில்லி மீட்டர் ஆகும் என்ன மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News