கட்டபொம்மன் மக்கள் இயக்க கூட்டம்
கட்டபொம்மன் மக்கள் இயக்க கூட்டம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-18 12:30 GMT
கட்டபொம்மன் இயக்க கூட்டம்
வத்தலக்குண்டு: வீரபாண்டிய கட்டபொம்மன் மக்கள் முன்னேற்ற இயக்கம் சார்பாக நிறுவனத் தலைவர் இளைய கட்டபொம்மன் வத்தலக்குண்டில் பஸ் ஸ்டாண்ட், காளியம்மன் கோயில் பகுதிகளில் கொடியினை ஏற்றினார். ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் செல்லப்பாண்டி தலைமையில் நடந்தது.
வீரபாண்டிய கட்டபொம்மன் பெயரில் ஆண்டுதோறும் மாநில அரசு விருது வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தலைமை குழு உறுப்பினர்கள் அழகர்சாமி, விஜயராகவன், வழக்கறிஞர்கள் ஜெயராமன், ராமச்சந்திரன், மாவட்ட நிர்வாகிகள் அழகர்சாமி, சரத்குமார் பங்கேற்றனர்.