காட்டுக்கோட்டை விவசாயிகள் ரயில்வே மேம்பாலம் அமைக்க முதலமைச்சரிடம் மனு

காட்டுக்கோட்டை பகுதியில் ரயில்வே கேட் அகற்றப்பட்டு சுரங்க பாலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள் முதலமைச்சர் நேரில் சந்தித்து கோரிக்கை மனு வழங்கினார்கள்.

Update: 2024-03-23 16:27 GMT

முதல்வரிடம் மனு அளித்த விவசாயிகள்

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை பகுதியில் ரயில்வே கேட்டை அகற்றி அப்பகுதியில் சுரங்கப்பாதை அமைக்க பணி நடைபெற்ற நிலையில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வந்த நிலையில் இன்று தஞ்சாவூரில் விவசாயிகள் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலினை சந்தித்து சுரங்கப்பாதை அமைக்காமல் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு வழங்கினார்கள்.

அதேபோல் புதிதாக அமைய உள்ள குமரன் சேகோ ஆலைக்கு தடை விதிக்க கோரியும் மனு வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் ஐக்கிய விவசாய சங்கத் தலைவர் சங்கர்ய்யா, செயலாளர் வழக்கறிஞர் கோவிந்தன், மாவட்ட செயலாளர் வெற்றி மணி, உள்ளிட்ட விவசாயிகள் பங்கேற்பு

Tags:    

Similar News