கவிநாடு கண்மாயில் பறவைகள் கணக்கெடுப்பு

புதுக்கோட்டை கவிநாடு கன்மாயில் மட்டும் 38 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன. இதில் இந்திய வகை பறவைகள் அடையாளம் காணப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.

Update: 2024-01-29 09:34 GMT

கவிநாடு கண்மாயில் பறவைகள் கணக்கெடுப்பு

கணக்கெடுப்பில் புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் அடையாளம் காணப்பட்ட பறவைகள். புதுக்கோட்டை மாவட்டத்தில் 25 ஈரநிலங்களைக் கொண்ட பகுதிகளில் (கடற்பகுதி, கண்மாய்கள், குளங்கள்) பறவைகள் கணக்கெடுப்பு தொடங்கியது. மாவட்ட வன அலுவலர்  சோ.கணேசலிங்கம் தலைமையில் தலா இரு வன அலுவலர்கள், இரு விலங்கியல் துறை மாணவர்கள், இரு தன்னார்வலர்களைக் கொண்ட 25 குழுக்கள் அமைக்கப்பட்டு இப்பணி நடைபெற்றது. புதுக்கோட்டை வனச் சரக்கத்தில் கவிநாடு கன்மாய், அன்னவாசல் பெரியகுளம், ஆரியூர் கண்மாய், திருக்காகுளம், அருவாகுளம் ஆகிய 5 இடங்களிலும், அறந்தாங்கி வனச்ரக அலுவலர் எம். சதாசிவம் தெரிவித்தார். வெள்ளனூர் கண்மாய் கரகத்திக்கோட்டை கடலோரப் பகுதிகளில் ஆன முத்துக்குடா கட்டுமாவடி ஆகிய இடங்களில் பறவைகள் கண்டுபிடிப்பு நடைபெறுவதாக வனச்சரக்க அலுவலர் எம் சதாசிவம் தெரிவித்தார். இதில் குறிப்பாக புதுக்கோட்டை நகருக்கு அருகேயுள்ள மிகப்பெரிய நீர் நிலையாகக் கருதப்படும் கவிநாடு கன்மாயில் மட்டும் 38 வகையான பறவைகள் கண்டறியப்பட்டன. இதில் இந்திய வகை காட்டுகாகம், இந்திய வகை நீர்காகம், நீலவால் பஞ்சுருட்டான், உள்ளான், கொட்டகை விழுங்கு, கரிசான், வெண் கொக்கு உள்ளிட்ட பறவைகள் அடையாளம் காணப்பட்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
Tags:    

Similar News