கெங்கவல்லி பெருமாள் கோயில் குடமுழுக்கு
கெங்கவல்லி பெருமாள் கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றது.
Update: 2024-03-22 02:15 GMT
கெங்கவல்லி:சேலம் மாவட்டம் கெங்கவல்லியில் 15 வருடங்களுக்கு பிறகு வரதராஜப் பெருமாள் கோயில் குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவையொட்டி கோபூஜை, மகாபூர்ணாஹூதி, மகாசாந்தி, திவ்வியப் பிரபந்தம் பாராயணம் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புண்ணியாகவாசனம், சுப்ரபாத சேவை, அக்னி ஆராதனம், பிரதான ஹோமம், பூர்ணாஹுதி ஆகயன நடைபெற்றது. இதனையடுத்து கோயில் கலசத்தில் புனித நீர் ஊற்றி, குடமுழுக்கு நடைபெற்றது நிகழ்ச்சியில் கெங்கவல்லி பேரூராட்சித் தலைவர் லோகாம்பாள், நகர திமுக செயலாளர் சு. பாலமுருகன், துணைத் தலைவர் மருதாம்பாள், திமுக, விளையாட்டு மேம்பாட்டு மாவட்ட துணை அமைப்பாளர் தங்கப்பாண்டியன், கவுன்சிலர்கள், ஊர்கரைக்காரர்கள், அறங்காவலர்கள், ஊர் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர். விழாவிற்கு கெங்கவல்லி போலீஸார், தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர்.