கன்னியாகுமரியில் 40 பவுன் நகை திருடிய கேரள ஆசாமி கைது

கன்னியாகுமரி அருகே வீட்டின் கதவை உடைத்து 40 சவரன் நகையை திருடிய நபரை 3 மணி நேரத்தில் போலீசார் மடக்கி பிடித்தனர்.

Update: 2023-10-23 04:15 GMT

கைது செய்யப்பட்ட ஹரி பிரசாத் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கன்னியாகுமரி அருகே உள்ள வடக்கு குண்டல் பகுதியை சேர்ந்தவர் தவமணி கிருபா (வயது34). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி ஜெயராணி. இவர் நேற்று முன்தினம் மாலையில் வீட்டை பூட்டிவிட்டு லீபுரத்தில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றார். பின்னர் நேற்று காலை 9 மணி அளவில் ஜெயராணி வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு கிடந்தது. வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது அறையில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 40 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து ஜெயராணி கன்னியாகுமரி போலீசாருக்கு தகவல் கொடுத்தார். உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது சந்தேகத்துக்குட்பட்ட ஒருவரை உடனே போலீசார் அவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவரிடம் இருந்த பையை சோதனையிட்ட போது அதில் 40 பவுன் நகைகள் இருந்தது. விசாரணையில் அவர் கேரள மாநிலம் நெடுமங்காடு குளத்துறையை சேர்ந்த ஹரி பிரசாத் (53) என்பதும், இவர் ஜெயராணி வீட்டில் கதவை உடைத்து நகைகள் திருடியதும் தெரியவந்தது. இதனையடுத்து ஹரி பிரசாதை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்த நகைகளை பறிமுதல் செய்தனர். இதற்கிடையே திருட்டு குறித்து தகவல் கிடைத்த 3 மணி நேரத்தில் திருடனை விரைந்து பிடித்த கன்னியாகுமரி போலீசாரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் பாராட்டினார்.


Tags:    

Similar News