மே.6ல் ‘கேலோ இந்தியா' திறனறியும் போட்டிகள்

இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் சேலத்தில் கேலோ இந்தியா' திறனறியும் போட்டிகள் வரும் மே 6ம் தேதி துவங்குகிறது.

Update: 2024-05-03 07:31 GMT

பைல் படம் 

இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் திறமையான இளம் விளையாட்டு வீரர், வீராங்கனைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிக்கும் விதமாக ‘கேலோ இந்தியா' திறனறியும் போட்டிகள் நடத்தி வருகிறது. அதன்படி இந்திய விளையாட்டு ஆணையத்தின் சேலம் பயிற்சி மையம் சார்பில் ‘கேலோ இந்தியா' திறனறியும் போட்டி, மகாத்மா காந்தி விளையாட்டு மைதானத்தில் வருகிற 6-ந் தேதி காலை 7 மணிக்கு தடகள போட்டி தொடங்குகிறது.

இந்த போட்டியை ஆசிய தடகள போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற வீராங்கனை பவித்ரா தொடங்கி வைக்கிறார். தொடர்ந்து 7-ந்தேதி கபடி, 8-ந் தேதி கோ-கோ, 9-ந் தேதி கைப்பந்து, 10-ந் தேதி கால்பந்து ஆகிய போட்டிகள் நடக்கிறது. இந்த போட்டிகளில் இளம் வீரர், வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி, நல்ல எதிர்காலத்தை உருவாக்கி கொள்ளலாம். இந்த தகவலை இந்திய விளையாட்டு ஆணைய சேலம் பயிற்சி மைய உதவி இயக்குனர் மஞ்சுளா தெரிவித்து உள்ளார்.

Tags:    

Similar News