வீரமாகாளியம்மன் கோவிலில் கிடா வெட்டு திருவிழா

வலையப்பட்டி வீரமாகாளியம்மன் கோவிலில் கிடா வெட்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது

Update: 2024-06-03 10:46 GMT

வலையப்பட்டி வீரமாகாளியம்மன் கோவிலில் கிடா வெட்டு திருவிழா விமரிசையாக நடைபெற்றது

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே கண்டரமாணிக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட வலையபட்டி கிராமத்தில் ஸ்ரீ வீரமா காளியம்மன் கோவிலில் பாரம்பரியமிக்க கிடாவெட்டு திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. ஆண்டுதோறும் திருமணம், குழந்தை வரம் வேண்டியும், விவசாயம், வியாபாரம் செழிக்கவும் போன்ற பல்வேறு நேர்த்திக் கடன்கள் நிறைவேற வேண்டி இக்கோவிலில் சேவல், கிடா முதலிய பிராணிகளை பலியிட்டு வழிபாடு நடத்தி வருகின்றனர்.

அதேபோல் இந்த ஆண்டும் அம்மனுக்கு பால், சந்தனம் உள்ளிட்ட பதினாறு வகை வஸ்திரங்களால் அபிஷேகம் நடைபெற்றது. மேலும் தீப ஆராதனையோடு சாமி ஆட்டமும் அருள்வாக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைதொடர்ந்து நேர்த்திக்கடனாக பலியிடப்பட்ட பிராணிகளின் மாமிசத்தை படையலிட்டு அன்னதான விருந்து பக்த கோடிகளுக்கு வழங்கப்பட்டது.

Tags:    

Similar News