குழந்தைகள் படைப்பாக்க முகாம் 

பட்டுக்கோட்டையில் தமுஎகச., சார்பில் குழந்தைகள் படைப்பாக்க முகாம் நடைபெற்றது.

Update: 2024-02-06 02:16 GMT
ஓவியம் வரையும் குழந்தைகள்

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் பட்டுக்கோட்டை கிளை, "குழந்தைகள் படைப்பாக்கம் உப குழு' சார்பாக, குழந்தைகள் படைப்பாக்க இரண்டாவது முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் நண்பகல் 1 மணி வரை, பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் மணிமண்டப வளாகத்தில் நடைபெற்றது.  முகாமிற்கு கிளைத் தலைவர் முருக.சரவணன் தலைமை வகித்தார். முகாம் ஒருங்கிணைப்பாளர் சரிதா பாலா வரவேற்று, நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார். முகாமை முன்னாள் வட்டாட்சியர் க. கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்தார்.  ஓவியம் வரைதல், களிமண் சிற்பம், காகிதக்கலை, விளையாட்டு, பாடல்கள், புத்தகம் வாசித்தல் என முகாம் சிறப்பாக நடைபெற்றது. 40 குழந்தைகள் பங்கெடுத்தனர், புத்தகம் வாசிப்பில் பெற்றோர்களும் கலந்து கொண்டனர். 

முகாமில், மாவட்ட துணைத் தலைவர் தி.தனபால், கிளை துணைத் தலைவர்                       தி.வாஞ்சிநாதன், கிளைப் பொருளாளர் கே.பக்கிரிசாமி, செயற்குழு உறுப்பினர் .        பாக்யபாலா, மருத்துவர் வீரமணி, கொண்டிகுளம் கிளைத் தலைவர் வீ.சாமிநாதன், கொண்டிகுளம் கிளை செயலாளர் ஆசைத்தம்பி, ஆசிரியர் ரஞ்சித், டைலர் மாணிக்கம் ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக பொறியாளர் மணிமாறன் நன்றி கூறினார்.

Tags:    

Similar News