மழலைகள் கொண்டாடிய கிறிஸ்துமஸ் விழா - பெற்றோர், ஆசிரியர் பங்கேற்பு

மானாமதுரை குட்வில் இன்டர்நேஷனல் மழலையர் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.

Update: 2023-12-24 04:37 GMT

கிறிஸ்துமஸ் விழா 

மானாமதுரை குட்வில் இன்டர்நேஷனல் மழலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு மாணவர்கள் ஏராளமானோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து வந்திருந்தனர். இதனை தொடர்ந்து மழலை மாணவர்களின் நடனம், பேச்சு மற்றும் பாட்டு, கவிதை போட்டிகள், இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை சித்தரிக்கும் நாடகம் மற்றும் பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து போட்டிகளில் வெற்றி பெற்ற மழலை மாணவர்களுக்கு பள்ளி தாளாளர் பூமிநாதன் பரிசுகளையும் இனிப்புகளையும் வழங்கி பாராட்டினார். இந்நிகழ்ச்சியில் முதல்வர் சுபாஷினி மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News