ஸ்ரீவித்யாமந்திர் பள்ளிகளின் மழலையர் பட்டமளிப்பு விழா....
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளிகளின் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-30 11:45 GMT
பட்டமளிப்பு விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் பள்ளிகளின் மழலையர் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. தொடக்க விழாவில் பள்ளிகளின் தலைவர் பி.மாணிக்கம் தலைமை வகித்தார். மெட்ரிக் பள்ளியின் முதல்வர் பி.கிருஷ்ணமூர்த்தி அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பள்ளியின் செயலர் வி.சுந்தரராஜன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்துப் பேசினார். மெட்ரிக் பள்ளி தலைமையாசிரியை டி.தமிழ்செல்வி, நர்சரி பள்ளி தலமையாசிரியை ஜி.கவிதா, சிபிஎஸ்சி பள்ளி முதல்வர் வி.சேட்டு ஆகியோர் பள்ளிகளின் ஆண்டறிக்கை வாசித்தனர். விழாவில் அண்ணாமலை பல்கலைக்கழக முன்னாள் செனட் உறுப்பினரும், ஒய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலருமான எம்.ஏ.உதயகுமார், அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மாணவர்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினார். இதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவில் பள்ளி பொருளாளர் வி.ராமதாஸ், சிபிஎஸ்சி பள்ளி சேர்மேன் எம்.ராமகிருஷ்ணன், துணைத் தலைவர் ஆர்.பெத்தண்ணன், கல்விக்குழுத் தலைவர் சி.நடராஜூ, நிறுவனத் தலைவர் டாக்டர் ஆர்.எம்.கிருஷ்ணன், இணைச்செயலர் வி.பாலகிருஷ்ணன், கல்வியியல் கல்லூர் சேர்மென் கே.குமாரசாமி, அறக்கட்டளை செயலர் எஸ்.சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் இதில் பங்கேற்றனர்.