கிங் ஆப் செய்தி எதிரொலி; மாவட்ட காவல்துறை நடவடிக்கை

மயிலாடுதுறை மாவட்டம் மணல்மேடு போலீசாருக்கு நிலுவையில் இருந்த நான்கு மாத பயணப்படி உடனடியாக வழங்கப்பட்டது.

Update: 2024-02-08 15:26 GMT

காவல் நிலையம் 

காவலர்களுக்கு பயணப்படியாக மாதம் சராசரியாக ரூ.2000 வழங்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் மாதந்தோறும் நிலுவை இன்றி பயணப்படி முறையாக வழங்கப்பட்டு வந்த நிலையில் கடந்த மூன்று மாத காலமாக மணல்மேடு காவல் நிலையத்திலிருந்து பயணப்படி காண எந்தவித நடவடிக்கையும் இல்லை .

மணல்மேடு காவல்நிலையத்தில் பணி புரியும் 40 காவலர்களுக்கும் மூன்று மாத காலமாக பயணப்படி இல்லாமல் தவித்து வருகின்றனர். நடவடிக்கை எடுக்க வேண்டிய மேல் அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளவில்லை, மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது தஞ்சை மண்டல டி .ஐ.ஜி. நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசார் எதிர்பார்க்கின்றனர் என்ற செய்தி நமது கிங் ஆப். ல் ஜனவரி 21ஆம் தேதி செய்தி வெளியாகி இருந்தது.

உடனடியாக மயிலாடுதுறை மாவட்ட காவல் துறை நிர்வாகம் நடவடிக்கை எடுத்ததன் பேரில் 4 மாத பயணப்படி ஒரே முறையில் போடப்பட்டுள்ளது. நடவடிக்கை எடுத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு மணல்மேடு போலீசார் நன்றி தெரிவித்தனர்.

Tags:    

Similar News