தேர்தல் பொது பார்வையாளராக கிரன்குமாரி பாசி நியமனம்

கிருஷ்ணகிரி மக்களைவை தொகுதி தேர்தல் பொது பார்வையாளராக கிரன்குமாரி பாசி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2024-03-27 04:51 GMT

ஆட்சியர் சரயுவுடன் கிரன்குமாரி பாசி

 கிருஷ்ணகிரி மாவட்டம் கிருஷ்ணகிரி பாராளுமன்ற பொது தேர்தல் 2024 முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் பொது பார்வையாளராக கிரண் குமாரி பாசி IAS  நியமிக்கப்பட்டுள்ளார் என  மாவட்ட ஆட்சியர் தகவல் வெளியிட்டுள்ளார்.   மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் கே எம் சரயு மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தங்கதுரை ஆகியோருடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.   மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் சரயு  தெரிவித்ததாவது இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு 6 சட்டமன்றத் தொகுதிக்கும் சேர்த்து ஒரு பொது பார்வையாளர் கிரண் குமாரி பாசி நியமிக்கப்பட்டுள்ள நிலையில் 6 சட்டமன்ற தொகுதிகளாக உள்ள ஊத்தங்கரை பர்கூர்,கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, ஓசூர், தளி, உள்ளிட்ட பகுதிகளில் செயல்படுவார் என தெரிவித்தார்.
Tags:    

Similar News