தீவனூர் கே.கே.தண்டபாணி வேர்ல்ட் பள்ளியில் முப்பெரும் விழா

தீவனூர் கே.கே.தண்டபாணி வேர்ல்ட் பள்ளியில் முப்பெரும் விழா நடைபெற்றது;

Update: 2024-03-30 16:27 GMT

மாணவர்களுக்கு பட்டம் வழங்கல்

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த தீவனூரில் உள்ள கே.கே.தண்டபாணி வேர்ல்ட் சி.பி.எஸ்.இ. பள்ளியில் சிறுவர் பட்டமளிப்பு விழா, சிறுவர்களின் தாத்தா, பாட்டியை கவுரவித்தல், சிறப்பு சேர்க்கை முகாம் ஆகிய முப்பெரும் விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கு பள்ளியின் தாளாளர் டாக்டர் தமிழ்குமரன் தலைமை தாங் கினார். செயலாளர் தரணி தண்டபாணி முன்னிலை வகித்தார். முதல்வர் பிராங்க் எடில் ராஜ் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக பள்ளியின் நிறுவனரும், உயர்நீதிமன்ற வக்கீலுமான கே.கே.தண்டபாணி கலந்து கொண்டு சிறுவர்களுக்கு பட்டங்களை வழங்கியதோடு, சிறுவர்களின் தாத்தா, பாட்டிகளை கவுரவித்தும், சிறப்பு சேர்க்கையை தொடங்கி வைத்தும் பேசினார். இதில் நிறுவனத்தின் நிர்வாக அலுவலர் சந்தோஷா தமிழ்குமரன், இயக்குனர் தமிழ் வள்ளி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News