கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி

எருமப்பட்டி அருகே சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது.

Update: 2024-02-09 16:28 GMT

எருமப்பட்டி பிப்ரவரி 10 எருமப்பட்டி அருகே உள்ள புதுக்கோட்டை ஊராட்சியில் புகழ்பெற்ற சௌடேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது கோவிலில் தை அமாவாசை மற்றும் ஆடி அமாவாசைகளில் சாமிக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு சக்தி அழைக்கும் நிகழ்ச்சியும் கத்தி போடும் நிகழ்ச்சியும் நடைபெறுவது வழக்கம் இதை தொடர்ந்து இந்த வருடம் தை அமாவாசையை முன்னிட்டு நேற்று சௌடேஸ்வரி அம்மன் கோவிலில் நேற்று காலை 6 மணிக்கு கணபதி பூஜையும் 7:00 மணிக்கு கோமாதா பூஜியம் செய்யப்பட்டது இதை தொடர்ந்து அம்மனுக்கு மாங்கல்ய தாரணம் மற்றும் திருமஞ்சனம் செய்யப்பட்டு சக்தி அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர் வீரக்குமாரர்கள் கத்தியால் அம்மனை சக்திஅழைத்துநேர்த்திக்கடன் செலுத்தினார்கள் இதைஒட்டி ஸ்ரீ சாமுண்டி அழைக்கும் நிகழ்ச்சியின் நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தியது உடன் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வயிற்றில் வாழைக்காய் வெட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது இதை அடுத்து சாமிக்கு சிறப்பு அலங்காரமாக தங்க கலசம் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் சேலம் நாமக்கல் எருமப்பட்டி பொட்டிரெட்டிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து சாமி அருள்பெற்றனர்

Tags:    

Similar News