கொல்லங்கோடு கோவில் தூக்கத் திருவிழா ஏப்ரல் 10ல் துவக்கம்

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்கத் திருவிழா ஏப்ரல் 10ம் தேதி துவங்குகிறது.

Update: 2024-03-21 04:09 GMT

கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்கத் திருவிழா ஏப்ரல் 10ம் தேதி துவங்குகிறது.  

கொல்லங்கோடு பத்ர காளி அம்மன் கோயில் தூக்கத் திருவிழா ஏப்ரல் 1ம் தேதி துவங்குகிறது. கோவா ஆளுநர் ஸ்ரீதரன் பிள்ளை திருவிழாவை துவக்கி வைக் கிறார். இஸ்ரோ தலைவர் சோம்நாத், ஆன்மீகவாதிகள், தமிழக, கேரள அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், சினிமா பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை ஏப்ரல் 10ம் தேதி நடக்கிறது. திருவிழா சம்பந்தமான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று கொல்லங்கோடு ஸ்ரீதேவி ஆடிட்டோரி யத்தில் நடைபெற்றது.

செயலாளர் மோகன் குமார் கூறியதாவது.இந்த வருடம் கோயில் திருவிழா நடைபெறும் கால கட்டத் தில் பள்ளிக்கூடம் விடுமுறை, மேலும் தேர்தல் பண்டிகை விடுமுறை உள்ளன. இதனால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது. ஆகை யால் கோவில் வளாகத்தில் அனைத்து பகுதிகளிலும் குடிநீர் வசதி ஏற்படுத்தப்ப டும். அது போல் 24 மணி நேர செயல்பாட்டுடன் மருத்துவ வசதி, ஓய்வறை உட்பட அனைத்து அடிப் படை வசதிகளும் ஏற்படுத் தப்படும்.

அரசின் சிறப்பு பேருந்துகள் இயக்குவதற்கான ஏற்பாடு கள் செய்யப்பட்டுள்ளன. போக்குவரத்தை சரி செய்ய வும், பாதுகாப்பை பலப் படுத்தவும் அதிகமான போலீ சார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கடந்த வருடம் 1320 குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை நடந்தது. இவ்வ ருடம் 1500 க்கும் அதிக மான நேர்ச்சை நடைபெற வாய்ப்பு உள்ளது என்றார்.

Tags:    

Similar News