கல்லூரி நண்பர்கள் விபத்தில் பலி: இளைஞர் தற்கொலை

கல்லூரி நண்பர்கள் இருவர் விபத்தில் இறந்ததால், விரக்தியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.;

Update: 2023-12-14 12:28 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

கல்லூரி நண்பர்கள் இருவர் விபத்தில் இறந்ததால் விரக்தியில் தூக்கிட்டு தற்கொலை செய்த இளைஞர். கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, ராமகிருஷ்ணபுரம் கிழக்கு, நிர்மலா மருத்துவமனைக்கு பின்புறம் வசித்து வருபவர் ஆறுமுகம் மகன் அருணாச்சலம்.


இவர் கோவையில் உள்ள கற்பகம் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கடந்த ஒன்றரை ஆண்டு முன்பு வரை பிஇ படித்து வந்தார். அருணாச்சலத்துடன் உடன் படித்து வந்த இரண்டு கல்லூரி நண்பர்கள் ஒரு விபத்தில் சிக்கி உயிரிழந்தனர். இதனால் மன அமைதி இழந்து, கல்லூரிக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் அருணாச்சலம். தொடர்ந்து இதனால் ஏற்பட்ட மன வேதனையால் அவதிப்பட்டு வந்த அருணாச்சலம் டிசம்பர் 11ஆம் தேதி இரவு 8 மணி முதல், மறுநாள் காலை ஏழு முப்பது மணி வரையிலான, இடைப்பட்ட நேரத்தில் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Advertisement

மறுநாள் காலை அவரது தந்தை ஆறுமுகம் அருணாச்சலம் இன்னும் தூங்கி எழுந்து வரவில்லையே! என சென்று பார்த்த போது, அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது கண்டு அதிர்ச்சியடைந்தார். எனவே, இது குறித்து கரூர் காவல் நிலையத்துக்கு அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், உயிரிழந்த அருணாச்சலத்தின் உடலை மீட்டு, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.

Tags:    

Similar News