கோணம் அரசு பாலிடெக்னிக்கில் முதலாண்டு மாணவர் சேர்க்கை

கோணம் அரசு பாலிடெக்னிக்கில் முதலாண்டு காலி இடங்களுக்கு மாணவர் சேர்க்கை நடைபெறுவதாக தெரிவிக்கப்படுள்ளது.

Update: 2024-06-29 07:48 GMT

அரசு பாலிடெக்னிக் கல்லூரி

குமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் ராஜா ஆறுமுக நயினார் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாண்டு டிப்ளமோ இன்ஜினியரிங் பயில்வதற்கான காலியிடங்கள் நிரப்புவதற்கு தொழில் நுட்ப கல்வி ஆணையர் அனுமதி அளித்துள்ளார்.எனவே 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களும், 11, 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அரசு நிர்ணயித்த மிக குறைந்த கட்டணத்தில் பயில கல்லூரியில் நேரடி சேர்க்கை நடக்கிறது. இக் கல்லூரியில் சிவில், எலக்ட்ரிக்கல் அன்ட் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன், பயோ மெடிக்கல் எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் ஆகிய இன்ஜினியரிங் படிப்புகளில் காலி இடங்கள் உள்ளன. கல்வி உதவி தொகை மற்றும் அரசின் அனைத்து சலுகைகளும் தகுதி உள்ள மாணவர்களுக்கு பெற்று தரப்படும். இவ்வாறு கூறி உள்ளார்.

Tags:    

Similar News