கொங்கு கலை அறிவியல் கல்லூரி 27வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கொங்கு கலை அறிவியல் கல்லூரி 27வது ஆண்டு விழாவில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட கல்லூரி மாணவ- மாணவியர்.;

Update: 2024-03-09 15:57 GMT
குழு படம் எடுத்துக் கொண்ட மாணவிகள்

கொங்கு கலை அறிவியல் கல்லூரி 27வது ஆண்டு விழாவில் குழு புகைப்படம் எடுத்துக்கொண்ட கல்லூரி மாணவ- மாணவியர். கரூரை அடுத்த வெண்ணைமலை பகுதியில் செயல்படும் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 27 ஆம் ஆண்டு விழா கல்லூரியில் உள்ள அட்லஸ் கூட்டரங்கில் நடைபெற்றது.

கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் அட்லஸ் நாச்சிமுத்து தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், கல்லூரியில் பயின்ற இருபால் மாணவியர் கலந்து கொண்டு, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆரவாரம் செய்தனர். இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கிருஷ்ணராயபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரெத்தினம்,

மூலனூர் பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் பழனிசாமி, மண்மங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சக்திவேல் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவில் கல்லூரியில் பயின்ற மாணவ- மாணவியர், கல்லூரி பேராசிரியர்கள், மற்றும் கல்லூரி நிர்வாகிகளுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Tags:    

Similar News