கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

ஆரணி அருகே கெங்கையம்மன் கோயில் கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

Update: 2024-06-16 13:51 GMT

கெங்கையம்மன் கோவிலில் கூழ்வார்த்தல் திருவிழா

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சாணார்பாளையம் கிராமத்தில் உள்ள கெங்கையம்மன் கோயிலில் கூழ்வார்த்தல் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து கங்கை அம்மன் பூங்கரகம் வீதியுலா நடைபெற்றது. சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News