ரூ.5.37 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் ஏலம்
சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.ரூ.5.37 லட்சத்துக்கு கொப்பரை தேங்காய் விற்பனையானது.
Update: 2024-01-24 04:44 GMT
சேலம் அருகே உத்தமசோழபுரத்தில் உள்ள சேலம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொப்பரை தேங்காய் மறைமுக ஏலம் வேளாண்மை துணை இயக்குனரும், முதுநிலை செயலாளருமான கண்ணன் தலைமையில் தேசிய வேளாண் மின்னணு சந்தை என்ற இணையதளம் மூலம் நடைபெற்றது. இதில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகளும், சேலம், நாமக்கல், ஈரோடு, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகளும் கலந்து கொண்டனர். கொப்பரை தேங்காய் கிலோ குறைந்தபட்சமாக ரூ.63-்கும் அதிகபட்சமாக ரூ.85-க்கும் விற்பனையானது. மொத்தம் 6.65 டன் அளவுள்ள 154 மூட்டை கொப்பரை தேங்காய் ரூ.5 லட்சத்து 37 ஆயிரத்திற்கு ஏலம் போனதாக ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் சுப்ரமணி தெரிவித்தார்.