கொசஸ்தலை கூட்டு குடிநீர் திட்டம் பணிகள் தீவிரம் !

பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது.

Update: 2024-04-06 06:36 GMT

குடிநீர் திட்டம் பணி

பள்ளிப்பட்டு அருகே உருவாகும் கொசஸ்தலை ஆறு, பூண்டி நீர்த்தேக்கத்தை சென்றடைகிறது. கொசஸ்தலை ஆற்றுக்கு, ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்ட நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து லவா ஆறு வழியாகவும், கிருஷ்ணாபுரம் அணையில் இருந்து குசா ஆறு வாயிலாகவும் நீர்வரத்து உள்ளது. கொசஸ்தலை ஆற்றின் நீர்வளத்தால், பள்ளிப்பட்டு முதல் பூண்டி வரையிலான 100க்கும் மேற்பட்ட கரையோர கிராமங்கள் வளமாக விளங்கி வருகின்றன. கொசஸ்தலையில் இருந்து குழாய் வாயிலாக, ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணி ஒன்றியங்களுக்கு கூட்டு குடிநீர் வசதி ஏற்படுத்தும் திட்டம் துவங்கியுள்ளது. தற்போது, பள்ளிப்பட்டு அடுத்த புல்லுார் காப்புக்காடு பகுதியில் ராட்சத குடிநீர் குழாய் பதிக்கும் பணி முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆர்.கே.பேட்டை சுற்றுப்பகுதியில் தற்போது ஆழ்துளை கிணறுகள் வாயிலாக குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது. அந்த ஆழ்துளை கிணறுகள், 500 முதல் 900 அடி ஆழம் வரை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News