பரவலான மழையால் உயருகிறது கிருஷ்ணகிரி அணை நீா்மட்டம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக பரவலாக தொடா்ந்து மழை பெய்து வருவதால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையின் நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது.;

Update: 2024-05-22 03:36 GMT

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கோடை மழை பெய்து வருகிறது. குறிப்பாக பகலில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், மாலை அல்லது இரவில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையால் ஏற்கெனவே காய்ந்து வந்த மா, தென்னை உள்ளிட்ட மரங்கள் மீண்டும் உயிா் பெற்று வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.

இந்த மழையால் விவசாயிகளுக்கு மட்டுமல்லாமல், பயிா்களுக்கும் உயிா் நீா் கிடைத்துள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 22.05.2024 புதன்கிழமை காலை 7 மணி நிலவரப்படி பெய்த மழையளவு (மி.மீ): அஞ்செட்டி - 5.4, பாரூா் - 6.8, தேன்கனிக்கோட்டை -3.0, ஒசூா் - 40.3, கிருஷ்ணகிரி-16 நெடுங்கல்- 33, பெணுகொண்டாபுரம்- 17.2, போச்சம்பள்ளி - 17.18, ராயக்கோட்டை-7.0 சூளகிரி - 5, தளி -, ஊத்தங்கரை - 6.6, சின்னாறு அணை -4.6,கெலவரப்பள்ளி அணை - 9.0 KRPஅணை - 9.2, பாம்பாறு அணை - 7, என மொத்தம் மாவட்டத்தில் 178 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாவட்டத்தில் சராசரியாக 11.13 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. கிருஷ்ணகிரி கே.ஆர்.பி  அணைக்கு விநாடிக்கு 551 கனஅடி நீா்வரத்து, அதிகரித்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 52 அடி. இதில் தற்போது அணையின் நீா்மட்டம் 43.40 அடியாக உள்ளது. அணையில் இருந்து பாசனக் கால்வாய்கள் வழியாக வினாடிக்கு 12 கனஅடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளது. 19-ஆம் தேதி 42 அடியாக இருந்த அணை நீா்மட்டம் தற்பொழுது உயா்ந்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையால் அணைக்கு நீா்வரத்து அதிகரித்து அணை நீா்மட்டம் படிப்படியாக உயா்ந்து வருகிறது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

Tags:    

Similar News