கிருஷ்ணகிரி: மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் - அமைச்சர் சக்கரபாணி பங்கேற்பு

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு என்னும் மைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் சக்கரபாணி கலந்து கொண்டார்,;

Update: 2024-05-26 02:10 GMT

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மற்றும் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு என்னும் மைய முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் தேவராஜ் மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சரும் கிருஷ்ணகிரி மாவட்ட பொறுப்பு அமைச்சரமான சக்கரபாணி கலந்து கொண்டு ஆலோசனைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

இந்த நிகழ்வில் அவைத் தலைவர் நாகராஜ் தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் இளங்கோவன் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப்பினருமான மதியழகன் கிருஷ்ணகிரி நாடாளுமன்ற தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத் கிருஷ்ணகிரி மற்றும் ஊத்தங்கரை பர்கூர் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் மாவட்ட நிர்வாகிகள் நகர ஒன்றிய பேரூர் கழக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர் .

Advertisement

இந்த கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.  குறிப்பாக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் வருகின்ற 03 06 2024 அன்று 18-வது நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் முதல் நாள் வர உள்ளது ஆகையால் கலைஞரின் பிறந்த நாள் விழாவை உற்சாகமாக கொண்டாட வேண்டும் ஆங்காங்கே கழக கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனைப்படி ஜூன் மாதம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Tags:    

Similar News