கிருஷ்ணகிரி குரூப்4 தேர்வு: ஆட்சியர் தலைமையில் கூட்டம்

கிருஷ்ணகிரி குரூப்4 தேர்வு நடைபெற உள்ள நிலையில் ஆட்சியர் தலைமையில் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-06-08 15:26 GMT

ஆட்சியர் தலைமையில் கூட்டம் 

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் நடைபெறவுள்ள (Group-IV) க்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளதை தொடர்ந்து சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் நடைபெற்றது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் எதிர்வரும் 09.06.2024 (ஞாயிற்றுக்கிழமை) அன்று முற்பகல் நடைபெறவுள்ள தொகுதி-IV (Group-IV) க்கான எழுத்து தேர்வு நடைபெறவுள்ளதை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு தலைமையில் தேர்வுகள் சிறப்பான முறையில் நடத்த சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் முன்னேற்பாடு கூட்டம் நடைபெற்றது. 

 மாவட்ட ஆட்சித்தலைவர் சரயு, தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால 09.08.2024 (ஞாமிற்றுக்கிழமை) அன்று முற்பகல் நாடைபெறவுள்ள தொகுதி-IV (Group-IV) எழுத்துத்தேர்வில் கிருஷ்ணகிரி மாவட்டத்தினர் எட்டு வட்டங்களில்,

கிருஷ்ணகிரி வட்டத்தில் உள்ள 44 தேர்வு மையங்களில் 14230 நபர்களும், அஞ்செட்டி வட்டத்தில் உள்ள 2 தேர்வு மையத்தில் 460 நபர்களும், பர்கூர் வட்டத்தில் உள்ள 9 தேர்வு மையங்களிலும் 2745 நபர்களும், ஒசூர் வட்டத்தில் உள்ள 31 தேர்வு மையங்களிலும் 9700 நபர்களும், போச்சம்பள்ளி வட்டத்தில் உள்ள 21 தேர்வு மையங்களிலும் 6060 நபர்களும்,

சூளகிரி வட்டத்தில் உள்ள 4 நேர்வு மையங்களிலும் 1170 நபர்களும், தேன்களிக்கோட்டை வட்டத்தில் உள்ள 4 தேர்வு பையங்களிலும் 1300 நபர்களும்,

மற்றும் ஊத்தங்கரை வட்டத்தில் உள்ள 16 தேர்வு மையங்களிலும் 5600 நபர்களும் ஆக மொத்தம் 131 தேர்வு மையங்களில் 41325 தேர்வர்கள் தேர்வு எழுத ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தேர்வுகள் தொடர்பான அனைத்து பணிகளையும் கண்காணிக்க அனைத்து வட்டத்திலும் துணை ஆட்சியர் நிலையில் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது. மேலும் அனைத்து தேர்வு மையங்களிலும் மின்வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் மேற்கொள்ளவும்,

போக்குவரத்துத்துறை சார்பாக தேர்தேர்வு எழுத செல்லும் வகையில் போக்குவரத்து வசதிகளை உறுதி செய்ய வேண்டும் எனவும் துறை சார்ந்த அலுவலர்கள் அனைத்து தேர்வு மையங்களையும் ஆய்வு செய்து முன்னேற்பாடு பணிகள் மேற்கொள்ள வோர்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.சாதனைக்குறள்,

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திருமதியுஷ்பா மற்றும் தேர்வாணைய பிரிவு அலுவலர்கள் உள்ளனர்.

Tags:    

Similar News