பேருந்து நடத்தினருக்கு பாராட்டு: மக்களிடம் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ

பேருந்தை‌ சுத்தம் செய்த நடத்துனருக்கு பாராட்டு தெரிவித்தார்.;

Update: 2024-06-14 08:32 GMT

நடத்துனருக்கு பாராட்டு 

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் சுற்றுப்பயணத்தில் இருந்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் வை. முத்துராஜா ,வாராப்பூர் பேருந்து நிறுத்தத்தில் நெடுநேரமாக ஒரு பேருந்து நின்றுக் கொண்டிருப்பதை கவனித்து, அந்த பேருந்தினுள் ஏறி பார்வையிட்டப் பொழுது, அந்த பேருந்தில் பயணித்த பயணி ஒருவர் உடல் ஒவ்வாமை காரணமாக வாந்தி எடுத்திருந்த நிலையில் அந்த பேருந்து நடத்துனர் அதை சுத்தம் செய்துகொண்டிருந்தார்.

Advertisement

அதைப் பார்த்த புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சுகாதாரமான முறையில் பேருந்தை வைத்திருக்க வேண்டும் என்று உடனடியாக அதனை சுத்தம் செய்த நடத்துனரின் செயலைப் பார்த்து கடமை உணர்வோடு செயல்பட்ட நடத்துனரை வாழ்த்தி பாராட்டினார்.

பின்னர் பொதுமக்களிடம், சரியான நேரத்தில் பேருந்து இயக்கப்படுகிறதா, ஓட்டுநர், நடத்துனர் பயணிகளை கண்ணியமாக நடத்துகிறார்களா என்பது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.

Tags:    

Similar News