சுரங்கத்தில் சிக்கியவர்களை மீட்க உதவிய நிறுவனங்களுக்கு பாராட்டு
திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் உத்தரகாண்ட் சுரங்கத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்க உதவி புரிந்த நிறுவனங்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
உத்தரகாண்ட் சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டவர்களை மீட்க பெரிதும் உதவி புரிந்த திருச்செங்கோடு பிஆர்டி ரிக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் பரந்தாமன் மற்றும் தரணி ஜியோ டெக் நிறுவனர் பூபதி மற்றும் ஜெயவேல் ஆகியோருக்கு பாராட்டு விழா திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களில் நடைபெற்றது.
கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவாசன் தலைமை தாங்கி பொன்னாடை போர்த்தி நினைவு பரிசுகளை வழங்கினார்.மேலும் சுரங்க தொழிலாளர்களை மீட்க பெரிதும் உதவி புரிந்தமைக்கு கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்கள் தங்களது பாராட்டுகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் முதன்மை செயல் அலுவலர் அகிலா முத்துராமலிங்கம் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரி முதல்வர்கள் கோபாலகிருஷ்ணன், செந்தில்குமார், மற்றும் பேராசிரியர்கள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.