குலமாணிக்கம் புனித இஞ்ஞாசியார் ஆலயத்தில் தேர்பவனி

குலமாணிக்கம் புனித இஞ்ஞாசியார் ஆலய தேர்பவனி நடைபெற்றது.

Update: 2024-04-29 08:59 GMT

தேர்பவனி

அரியலூர் மாவட்டம், திருமானூர் அடுத்த குலமாணிக்கம் கிராமத்திலுள்ள புனித இஞ்ஞாசியர் ஆலய திருவிழாவையொட்டி ஆரம்பர தேர்பவனி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. இந்த ஆலயத் திருவிழா கடந்த 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குத் தந்தை செல்வராஜ் கொடியை புனிதப்படுத்தி திருவிழாவை தொடக்கி வைத்து திருப்பலி உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து நாள் தோறும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான அலங்கார ஆடம்பர தேர்பவனி சனிக்கிழமை நள்ளிரவு நடைபெற்றது. மலர் மற்றும் மின்னொளி அலங்கார தேரில் புனித இஞ்ஞாசியார் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அனைத்து மதத்தினரும் தங்களது வீடுகள் தோறும் மலர் தூவியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் புனித இஞ்ஞாசியார் அருளை பெற்றனர்.

செம்பியக்குடி, குலமாணிக்கம், புதுக்கோட்டை, பாக்கியநாதபுரம், விளாகம் உள்ளிட்ட கிராமங்களில் ஏரளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News