குலசை தசரா விழா - 5000 பேருக்கு அன்னதானம்

தூத்துக்குடி ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ முத்தாரம்மன் தசரா அன்னதான குழு சார்பாக குலசேகரப்பட்டினம் தசரா விழாவில் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

Update: 2023-10-28 02:38 GMT

அன்னதானம் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
உலகப் புகழ் பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்த படியாக தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூருக்கு அருகிலுள்ள குலசேகரபட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடை பெற்று வருவது வழக்கம். பிற மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தும் பல்வேறு வேடங்கள் அணிந்தும் காணிக்கை பெற்று அம்மனுக்கு நேர்த்தி கடன் செலுத்துவது வழக்கம். கடந்த 15ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கிய இந்த தசரா திருவிழா இந்த நிலையில் குலசை தசரா திருவிழாவில் விரதமிருந்து காளி, அம்மன், கிருஷ்ணன், சிவன் போன்ற வேடம் அணியும் பக்தர்கள் சொந்த ஊர்களில் தங்கள் குழுவினருடன் பாரம்பரிய கலையான கரகாட்ட கலைஞர்களுடன் நடனமாடி காணிக்கை பெற்று வந்தனர் ஆண்டுதோறும் 400க்கும் மேற்பட்ட தசரா குழுக்கள் குலசை முத்தாரம்மன் கோவிலுக்கு காணிக்கை செலுத்த வந்தனர். மேலும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தசரா திருவிழாவின் 11 வது நாளான அன்று தூத்துக்குடி ஸ்ரீ விஸ்வகர்மா ஸ்ரீ முத்தாரம்மன் தசரா அன்னதான குழு சார்பாக அன்னதானம் வழங்கப்பட்டது. அன்று காலை 10 மணி முதல் மாலை வரை சுமார் 5000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News