குமாரபாளையம்ஜே.கே.கே. நடராஜா சேவை இயக்கம் சார்பில் மருத்துவ முகாம்
குமாரபாளையம்ஜே.கே.கே. நடராஜா சேவை இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-25 13:12 GMT
மருத்துவ முகாமில் பங்கேற்றவர்கள்
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் ஜே.கே.கே. நடராஜா கல்வி நிறுவனர் ஜே.கே.கே. நடராஜா சேவை இயக்கம் சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது. முகாமில் பார்வை குறைபாடு, கண் புரை உள்ள நபர்களுக்கு கண் அறுவை சிகிச்சை லேசர் முறையில் 15,000 மதிப்புள்ள லென்ஸ் பொருத்தப்பட்டு, 48 நபர்களுக்கு the eye foundation மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
மீதமுள்ளவர்களுக்கு கிட்டப்பார்வை தூரப்பார்வை உள்ள நபர்களுக்கு கண் கண்ணாடி 3,000 ரூபாய் மதிப்புள்ள கண்ணாடி 124 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த வாய்ப்பு ஏற்படுத்தி தந்த ஓம்சரவணாவிற்கு அனைவரும் நன்றி தெரிவித்தார்கள்.