குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் இடமாற்றம்
குமாரபாளையம் நகராட்சி ஆணையர் சரவணன் ஆரணி நகராட்சிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.;
Update: 2024-03-14 05:56 GMT
நகராட்சி ஆணையர் சரவணன்
தேர்தல் வருவதையொட்டி போலீஸ், வருவாய்த்துறை உள்ளிட்ட பல துறைகளில் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு வருகிறார்கள். குமாரபாளையம் இன்ஸ்பெக்டர் தவமணி தேன்கனிகோட்டைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதன் அடுத்த கட்டமாக குமாரபாளையம் நகராட்சி ஆணையாளர் சரவணன், ஆரணி நகராட்சி ஆணையாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக ஆரணி நகராட்சி ஆணையாளர் குமரன் விரைவில் குமாரபாளையம் நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்கவுள்ளார்.