குமாரபாளையம் : விசைத்தறி தொழிலாளர் போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் விசைத்தறி தொழிலாளர்கள் போனஸ் தொடர்பாக நடைபெற்ற பேச்சு வார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

Update: 2023-11-04 12:52 GMT

விசைத்தறித் தொழிலாளர் போனஸ் பேச்சுவார்த்தை தோல்வி

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில் ஏராளமான விசைத்தறி கூடங்கள் இயங்கி வருகிறது. இந்த தொழிலை நம்பி 50 ஆயிரம் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தீபாவளி போனஸ் ஒப்பந்தம் காலாவதியாகி உள்ள நிலையில் ,தற்போது புதிய தீபாவளி போனஸ் ஒப்பந்தம் போட வேண்டிய நிலை உள்ளது. இந்நிலையில் போனஸ் பேச்சு வார்த்தைக்கு பள்ளிபாளையம் விசைத்தறி உரிமையாளர் சங்க நிர்வாகிகள் விசைத்தறி தொழிலாளர் சங்க நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்தனர். மேலும், இதுகுறித்து அரசு தலையிட வேண்டும் என தொழிற்சங்க நிர்வாகிகள், தமிழக முதல்வர் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தொழிலாளர் ஆணையாளர் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி இருந்தனர்.

இந்நிலையில், பள்ளிபாளையம் பேருந்து நிலையம் அருகே அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் தீபாவளி போனஸ் பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. முதல் கட்டமாக நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் உறுதியான முடிவுகள் எட்டப்படாததால் வரும் எட்டாம் தேதிக்கு மீண்டும் பேச்சு வார்த்தை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தொழிற்சங்க நிர்வாகிகள் கூறும் பொழுது 20% சதவீதம் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும் என கேட்டு சிஐடியு தொழிற்சங்கம் மற்றும் நாமக்கல் மாவட்டம் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் சார்பில், தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ளதால் போனஸ் பேச்சுவார்த்தையை சுமூகமாக தீர்ப்பதற்கு, அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் விசைத்தறி உரிமையாளர்கள் முன் வர வேண்டுமென தெரிவித்தனர்.

Tags:    

Similar News