குமரி : சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு
குமரி : சாலையில் நடந்து சென்ற பெண்ணின் 11 பவுன் நகை பறிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள தம்மத்து கோணம் பகுதியை சேர்ந்தவர் லிங்கேஷ் மனைவி ஐஸ்வர்யா (38). இவர் கன்னியாகுமரி அருகே உள்ள கொட்டாரத்தில் தனது தாயார் வீட்டிற்கு நேற்று மாலை சென்றுள்ளார்.
இரவில் அங்கு தங்கிய அவர் இன்று காலையில் தனது வீட்டுக்கு செல்ல பஸ் ஏறுவதற்காக கொட்டாரம் பஸ் நிலையத்திற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். கொட்டாரம் மெயின் ரோட்டில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளி ரோட்டில் நடந்து சென்ற போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவர், கண்ணிமைக்கும் நேரத்தில் ஐஸ்வர்யா கழுத்தில் கிடந்த 1 | பவுன் தங்கத் தாலிச் சங்கிலியை பறித்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டார்.
இதன் மதிப்பு மூன்று லட்சம் என்று தெரிகிறது. ஐஸ்வர்யா அலறி கூச்சலிட்டார். உடனே அக்கம் பக்கத்தினர் வந்து கூடினர். இது குறித்து ஐஸ்வர்யா கன்னியாகுமரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் கன்னியாகுமரி போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தினார்கள். மேலும கொட்டாரம் சந்திப்பு பகுதியில் உள்ள சிசிடிவி கண்காணிப்பு கேமரா பதிவுகளை கைப்பற்றி விசாரித்து வருகிறார்கள்.