குமரி :  சுகாதாரப்பேரவை திட்ட விளக்க கூட்டம்  

குமரி கலெக்டர் அலுவலகத்தில் சுகாதாரப்பேரவை திட்ட விளக்க கூட்டம்.

Update: 2024-03-08 04:25 GMT

 திட்ட விளக்க கூட்டம்  

கன்னியாகுமரி மாவட்ட பொதுசுகாதாரத்துறையின் சார்பில் சுகாதாரப்பேரவை திட்ட விளக்க கூட்டம் ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில்  நடைபெற்றது.  இக்கூட்டம் குறித்து மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் வ.விஜய் வசந்த் காய்ச்சல்மானி (தெர்மாமீட்டர்) கருவியினை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வழங்கினார். மற்றும்  நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், சட்டமன்ற உறுப்பினர்கள் என்.தளவாய்சுந்தரம் (கன்னியாகுமரி), செ.ராஜேஷ்குமார் (கிள்ளியூர்), மாவட்ட ஊராட்சி குழு தலைவர்  மெர்லியண்ட்தாஸ், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.பிறின்ஸ் பயஸ், பொது சுகாதார பணிகள் துணை இயக்குநர் மரு.மீனாட்சி, கோட்டார் அரசு ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி மருத்துவமனை  முதல்வர் மரு.கிளாரன்ஸ் உட்பட அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.
Tags:    

Similar News