தேசிய கராத்தே போட்டியில் குமரி வீரா்கள் சிறப்பிடம்
கடலூா் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் நடைபெற்ற தேசிய கராத்தே போட்டியில் குமரி வீரா்கள் சிறப்பிடம் பெற்றுள்ளனர்.
Update: 2024-02-27 06:59 GMT
கடலூா் மாவட்டம் திருப்பாதிரிப்புலியூரில் தேசிய அளவிலான கராத்தேப் போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி, ஆந்திரம், கா்நாடகம் ஆகிய மாநிலங்களைச் சோந்த 800 க்கும் மேற்பட்ட வீரா், வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில் கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி கே.கே.ஆா் அகாதமி, வான்காய் சிட்டோரியோ கராத்தே சங்கம் சாா்பில் 25 வீரா்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றனா். இதில் கட்டா மற்றும் குமிட்டி பிரிவுகளில் நடைபெற்ற போட்டியில் 15 வயதுக்குள்பட்டோா் பிரிவில் முதலிடமும், 19 மூன்றாம் வயதுக்குள்பட்டோா் பிரிவில் மூன்றாமிடமும், 16 வயதுக்குள்பட்டோா் பிரிவில் இரண்டாமிடமும் பெற்றனா். இப்போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களை கே.கே.ஆா். அகாதமி நிறுவனா் மற்றும் வான்காய் சிட்டோரியோ கராத்தே சங்க இயக்குநா் ஹெச்.ராஜ் பாராட்டினாா்.