குமரி: ரவுடிகளின் வீடுகளில் தனிப்படை அதிரடி சோதனை - 17 பேர் கைது

கன்னியாகுமரி மாவட்ட ரவுடிகளின் வீடுகளில் தனிப்படை போலீசார் நடத்திய அதிரடி சோதனையில் 17 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-05-27 03:20 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ரவுடிகள் நடவடிக்கைகளை கட்டுப்படுத்தும்  வகையில் நாகர்கோவில், தக்கலை, கன்னியாகுமரி, குளச்சல் ஆகிய நான்கு துணை போலிஸ் சரகங்களிலும் உள்ள காவல் நிலையங்கள் வாரியாக ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளன.    இதில் ஏ பி சி டி என நான்கு வகையாக ரவுடிகளை குறித்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்ட எஸ்பி சுந்தரவதனம்  உத்தரவின் பேரில் மாவட்டம்  முழுதும் கடந்த இரு நாட்களாக நடந்த சோதனையில் 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்றும் கைது நடவடிக்கை இருந்தது.    மேலும் பட்டியலில் உள்ளவர்களின் வீடுகளில் சோதனை நடத்தவும் எஸ்பி உத்தரவிட்டுள்ளார். அதன் பெயரில் ரௌடிகள் பட்டியில் உள்ளவர்களின் வீடுகளில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். இதில் சிலரின் வீடுகளில் இருந்து அரிவாள்கள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் எதுவும் பதிக்கி வைத்துள்ளார்களா?  என்பது குறித்தும் சோதனை நடந்து வருகிறது.       மேலும் வெளி மாவட்டங்களில் தலைமறைவாக இருப்பவர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கவும் எஸ்பி சுந்தரவதனம் உத்தரவிட்டுள்ளார் அதன் பேரில் கோவை சென்னைக்கும் தனிப்படையினர் செல்ல உள்ளனர்.

Tags:    

Similar News