கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கும்பாபிேஷகம்

சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நாளை நடைபெறும் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-20 06:09 GMT

கும்பாபிஷேக பணிகள் 

சின்னசேலம் வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிேஷகம் நாளை 21ம் தேதி நடக்கிறது.விழாவையொட்டி நேற்று காலை 7:00 மணிக்கு வேதபாராயணம், தேவதா அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிர ஹோமம், லஷ்மி ஹோமம், வாஸ்து சாந்தி பூஜைகள் நடந்தன. பின் சக்தி விநாயகர் கோவிலில் இருந்து சக்தி அழைத்தல் வைபவம் நடந்தது. மாலை 5:30 மணிக்கு கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜை, வேதிகார்ச்சனை, மூலமந்திர ஹோமம் உள்ளிட்ட பூஜை நடந்தது. தொடர்ந்து இன்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, கோ பூஜை, தம்பதி பூஜை, சோடஷ உபச்சார உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடக்கிறது. இதனையடுத்து நாளை காலை 11:30 மணிக்கு வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆர்ய வைசிய சமூகத்தினர் செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News