ஸ்ரீ ஆதி விநாயகர், பாலாஜி பகவதி அம்மன், கோட்டை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா

NSK நகரில் ஸ்ரீ ஆதி விநாயகர், பாலாஜி பகவதி அம்மன், கோட்டை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2023-11-24 13:19 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
NSK நகரில், ஸ்ரீ ஆதி விநாயகர், பாலாஜி பகவதி அம்மன், கோட்டை கருப்பண்ணசாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கரூர் மாவட்டம், நெரூர் தென்பாகம், கலைவாணர் என் எஸ் கே நகரில் அமைந்துள்ள, ஸ்ரீ ஆதி விநாயகர், ஸ்ரீ பாலாஜி பகவதி அம்மன், ஸ்ரீ கோட்டை கருப்பண்ண சாமி கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, அதிகாலை முதலே மங்கள இசை உடன் துவங்கியது. பின்னர், விக்னேஸ்வர பூஜை, புண்ணியாக வசனம், இரண்டாம் காலையாக பூஜை, நாடி சந்தானம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்று கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து, கோவில் விமான கலசத்தில் புனித நீரை ஊற்றி கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து சுவாமிக்கு மகா தீபாராதனையும், அதைத்தொடர்ந்து விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அதிமுக மாவட்ட அவைத்தலைவர் திருவிக, கரூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மதுசூதனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
Tags:    

Similar News