சின்ன முத்துமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேக விழா

செங்கல்பட்டு சின்ன முத்துமாரியம்மன் கோயிலில் 24-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.

Update: 2024-03-19 15:59 GMT

செங்கல்பட்டு சின்ன முத்துமாரியம்மன் கோயிலில் 24-ஆம் தேதி கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது.


செங்கல்பட்டு சின்னமேலமையூா் ஜிஎஸ்டி சாலையில் அமைந்துள்ள பழைமைவாய்ந்த ஸ்ரீ சின்னமுத்துமாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் வரும் 24-ஆம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு, புதன்கிழமை (மாா்ச் 20) விக்கிரகங்கள், உற்சவா்கள், கலசங்கள், மர வாகனங்கள், அனைத்து வாத்தியங்கள் முழங்க கரிகோல ஊா்வலம் நடைபெறுகிறது. மாலை 6 மணிக்கு அனைத்து மூலவா் சிலைகள் நிா்மாணிக்கப்படும். தொடா்ந்து மாா்ச் 21, 22, 23 தேதிகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. தொடா்ந்து ஞாயிற்றுக்கிழமை (மாா்ச் 24) காலை விசேஷ சாந்தி, நான்காம் கால பூஜைகள், மூலமந்த்ர ஹோமங்கள், மகா பூா்ணாஹுதி, யாத்ரா தானம், யாக சாலையிலிருந்து கலசங்கள் புறப்படுதல், காலை 10 மணிக்கு மேல் ஸ்ரீ முத்துமாரியம்மன் ராஜகோபுரம், விமான கோபுரம் மற்றும் பரிவார கோபுரங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. ஏற்பாடுகளை முன்னாள் அறங்காவலா் சி.வி.என்.குமாரசாமி உள்ளிட்ட திருப்பணி குழுவினா் செய்துள்ளனா்.
Tags:    

Similar News