மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா

மீனாட்சி சொக்கநாதர் கோவிலில் கும்பாபிஷேக விழா

Update: 2023-11-17 13:21 GMT

கும்பாபிஷேக விழா


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே பிரசித்திபெற்ற முறையூர் மீனாட்சி சொக்கநாதர் திருக்கோயிலில் 27 ஆண்டுகளுக்கு பிறகு மஹா கும்பாபிஷேகம் என்னும் திருக்குட நன்னீராட்டு பெருவிழா 42 குண்டங்கள் அமைத்து 60 சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றி மஹா அபிஷேகம் வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அடுத்தடியாக சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குட்பட்ட சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி அருகே மிகவும் பிரசித்திபெற்ற முறையூர் ல் அருள்பாலிக்கும் அன்னை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் கோயில் உள்ளது. சுமார் 800 ஆண்டுகள் பழமையான பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்ட இந்த கோவிலில் கடந்த 1975 - 1995 ம் ஆண்டுகளில் மஹா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. புதிதாக இரண்டு ராஜ கோபுரங்கள் மற்றும் கல் மண்டபங்கள் கட்டப்பட்டு திருப்பணிகள் நிறைவு பெற்றன. கடந்த 11-ம் தேதி 60 சிவாச்சாரியார்கள் 42 குண்டங்கள் அமைக்கப்பட்டு முதல் கால யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷே விழா வெகுவிமர்சையாக தொடங்கியது. இதைத்தொடர்ந்து கோபூஜை, கணபதி பூஜை, சப்த கன்னி பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றது. இன்று நிறைவாக ஆறாம் கால யாக பூஜைகளான நாடி சந்தானம், ஸபர்ஷாஹூதி, மஹா பூர்ணாஹூதியுடன் உபசாரங்கள் நடைபெற்றது.

முன்னதாக பல்வேறு கிராமங்களில் இருந்து பட்டு சீர்வரிசை கொண்டு வந்து மரியாதை செய்தனர். தொடர்ந்து யாகசாலையில் இருந்து கடம் புறப்பட்டு புனித நீர் குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து யாகசாலையை சுற்றி வலம் வந்து கோபுர கலசத்தை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து சிவகங்கை சமஸ்தான ராணி மதுராந்தகி நாச்சியார் முனனிலையில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க தலைமை சிவாச்சாரியார் பிச்சைகுருக்கள் நந்தி கொடி அசைக்க அனைத்து கோபுர கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் வெகுவிமர்சையாக நடந்தது.

தொடர்ந்து. கும்பங்களுக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து மூலவர்கள் மீனாட்சி சொக்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேக நிகழ்ச்சியை காண சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். வந்திருந்த பக்தர்கள் அனைவருக்கும் மின் மோட்டார் பம்ப் மூலம் புனிதநீர் தெளிக்கப்பட்டது. அதை தொடர்ந்து அனைவருக்கும் இறைவனின் அருட்பிரசாதமும், அன்னதானமும் நடைபெற்றது,

Tags:    

Similar News