திருக்காம்புலியூரில் ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேகம்

திருக்காம்புலியூரில் ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

Update: 2024-02-15 16:17 GMT

சிறப்பு அலங்காரத்தில் சுவாமி

திருக்காம்புலியூரில் ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் தாலுகாவிற்கு உட்பட்ட, திருக்காம்புலியூர் கிராமத்தில் உள்ள மேட்டுத்திருக்காம்புலியூரில் அமைந்திருக்கும் ஸ்ரீ சர்வ சக்தி விநாயகர், ஸ்ரீ பகவதி அம்மன்,

ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பாலமுருகன் ஆலயம் புனரமைக்கப்பட்டு இன்று மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு விநாயகர் பூஜை, புண்ணியாக வாசனம், பிம்ம சுத்தி, பிம்ம ரக்க்ஷாந்தனம்,

கோ பூஜை,வேதிகா அர்ச்சனை, வேத பாராயணம், நாடி சந்தானம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்று, யாத்ரா தானமும், விநாயகர் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித நீரை, சிவாச்சாரியார்கள் கோவில் கலசத்திற்கு எடுத்துச் சென்று, கும்பத்தில் ஊற்றி கும்பாபிஷேக விழாவை வெகு விமர்சையாக நடத்தினர். இதனைத் தொடர்ந்து மூலவருக்கு மகா தீபாதாரணையும் நடைபெற்றது. நாட்டாமை பழனிச்சாமி தலைமையில்

நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், மேட்டு திருக்காம்புலியூர் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஊர் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News