கொளப்பாடு ஸ்ரீ ஆதியண்ணன் சுவாமி கோயில் கும்பாபிஷேகம்

நாகை அருகே கொளப்பாடு ஸ்ரீ ஆதியண்ணன் சுவாமி கோயிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் வெகு விமர்சையாக நடைபெற்றது; திரளான பக்தர்கள் பங்கேற்று மனம் உருகி சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-06-13 09:12 GMT

கும்பாபிஷேகம் 

. நாகை மாவட்டம் திருக்குவளை அடுத்த கொளப்பாடு ஆதியண்ணன்  சுவாமி  கோயில் கும்பாபிஷேகம்  15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று வெகு விமர்சையாக நடைபெற்றது. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு கீற்றுக் கொட்டகையில் இருந்த இக்கோயில் பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில்  புதுப்பிக்கப்பட்டது. 15 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று நடக்கும் கும்பாபிஷேக விழா  முதல் கால யாக சாலை பூஜையுடன் ஜூன்10 ஆம் தேதி துவங்கியது. தொடர்ந்து நான்கு கால யாக பூஜைகள் நிறைவு பெற்று மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.

தொடர்ந்து மேளதாளங்கள் முழங்க கடம் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வேத மந்திரங்கள் ஓத, கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமர்சையாக நடைபெற்றது. பின்னர் இக்கோயிலில் உள்ள ஸ்ரீ பூர்ணாம்பிகா ஸ்ரீ புஷ்கலாம்பிகா சமேத ஸ்ரீ ஹரிஹர புத்ர மஹாசாஸ்தா அய்யனார், ஸ்ரீ ஆதியண்ணன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்றனர். பூங்காவுக்கு நிகராக இயற்கை சூழலோடு மறு கட்டமைப்போடு புதுப்பிக்கப்பட்ட இக்கோயிலில் இதற்கான ஏற்பாடுகளை பெங்களூரைச் சேர்ந்த துரைராஜ்- பூரணி தம்பதியினர் குடும்பத்தார் செய்திருந்தனர்.இதில் கொளப்பாடு கிராமவாசிகள் ஆலய மருளாளிகள், பக்த கோடிகள்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News