89ஆண்டுகளுக்கு பின் பெரியசூரியூா் ஆதிமூா்த்தீஸ்வரா் கோயிலில் கும்பாபிஷேகம்

திருச்சி மாவட்டம், பெரிய சூரியூா் கிராமத்தில் உள்ள ஆதிமூா்த்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் 89 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்றது.

Update: 2024-02-27 12:17 GMT

கும்பாபிஷேகம்

திருச்சி மாவட்டம், பெரிய சூரியூா் கிராமத்தில் உள்ள ஆதிமூா்த்தீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம் 89 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை நடைபெற்றது. திருவெறும்பூா் அருகே பெரிய சூரியூரில் பழைமை வாய்ந்த ஆதி மூா்த்தீஸ்வரா் கோயில் உள்ளது.

இந்த கோயிலில் சூரியன் வழிபட்டதால், இந்த ஊறுக்கு சூரியூா் எனப் பெயா் வந்ததாகக் கூறப்படுகிறது. இக்கோயில் கும்பாபிஷேகம் கடந்த 1935-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் பிறகு சிதலமடைந்த நிலையில் இருந்த கோயில் அண்மையில் புனரமைக்கப்பட்டு, 89 ஆண்டுகளுக்குப் பிறகு திங்கள்கிழமை கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக, பிப். 22-ஆம் தேதி அனுஞ்ஞை, பூஜையுடன் விழா தொடங்கியது. பிப்.23- ஆம் தேதி கணபதி ஹோமம், பிப். 25-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமைஃ யாக சாலை பூஜையும் விக்னேஷ்வர பூஜையும் நடைபெற்றது. இதையடுத்து திங்கள்கிழமை காலை இறுதிகட்ட யாகசாலை பூஜை நடைபெற்றது.

தொடா்ந்து, கலசங்களில் கொண்டு வரப்பட்ட புனித நீா் கருவறை கலசங்களுக்கும், தொடா்ந்து, பரிவார தெய்வங்களான விநாயகா், பாலசுப்பிரமணியா், தட்சிணாமூா்த்தி, சண்டிகேசுவரா், நந்திகேசுவரா், துா்க்கை, நவகிரஹங்கள், பைரவா் சன்னதிகளுக்கும் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில், தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏவுமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திரளான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

Tags:    

Similar News